MAT REMPIT கும்பலின் 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 23 Mar, 2025
மார்ச் 23,
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக 30 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய Seberang Perai மாவட்டக் காவல்துறையினர் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நேற்றிரவு 10 மணி முதல் காலை 7 மணி வரையில் 200 மோட்டார் சைக்கிள்களைச் சோதனையிட்டதில் 30 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்ததாகவும் 90 மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மத்திய Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.
முறையான ஆவணங்கள் இல்லாத 30 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்ததாகவும் பதின்ம வயது மோட்டார் சைக்கிளோட்டிகளைத் தடுத்து வைத்து பெற்றோர்களை அழைத்து கண்டித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளின் பாகங்களை மாற்றி அமைத்தது, பதிவு எண்களைக் கொண்டிருக்காதது போன்ற குற்றங்களுக்காக 90 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார்.
Polis merampas 30 motosikal dan mengeluarkan 90 saman dalam operasi membanteras lumba haram di Lebuhraya Utara-Selatan. Remaja terlibat dikenakan tindakan sementara ibu bapa dipanggil untuk memberi amaran. Kesalahan termasuk lesen tiada dan pengubahsuaian motosikal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *