1MDB ஊழல் வழக்கின் முதல் குற்றவாளி நஜீப்!

- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
1MDB ஊழல் வழக்கின் முதல் குற்றவாளி நஜீப்!
மார்ச் 30,
1MDB ஊழல் வழக்கின் முதல் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டியவர் முன்னாள் பிரதமர் நஜீப் என புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வு முன்னாள் அதிகாரி R RAJAGOPAL நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 1MDB தொடர்பானக் கள்ளப் பணப்பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் 1MDB அலுவலகத்தைச் சோதனையிட்ட அதிகாரிகளில் ஒருவரான R RAJAGOPAL அவர்களின் வாக்குமூலம் முக்கிய சாட்சியாக அரசு கருதுவதாக நீதிபதி தெரிவித்தார்.
வணிகக் குற்றங்களுக்காக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1MDB பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியதாவும் சம்மந்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 1MDB முதலீட்டுப் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகை நஜீப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைக்க பெற்றதாகவும் R Rajagopal நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
Bekas Perdana Menteri Najib didakwa sebagai pelaku utama dalam siasatan kes 1MDB berdasarkan keterangan bekas R Rajagopal, pegawai siasatan Bukit Aman. Dokumen yang dirampas menunjukkan pemindahan dana 1MDB ke akaun peribadi Najib menjadi bukti penting dalam perbicaraan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *