கடலடி எறிபடை" போன்ற சாதனம் கடற்கரையில் கண்டுபிடிப்பு!

- Muthu Kumar
- 24 Mar, 2025
கோலா நெருஸ், மார்ச் 24-
திரெங்கானுவின் பந்தாய் செபராங் தக்கீரில் கடலடி எறிபடையின் (தொர்பேடோ)
வடிவமைப்புக் கொண்ட உலோகச் சாதனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது வெடிக்காமல் போன ஒரு வெடிகுண்டு அல்ல என்பதைப் போலீசார் நேற்று உறுதிப்படுத்தினர்.
நேற்று காலை 7.30 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர். அங்கு எறிபடையைப் போன்று தோற்றமளிக்கக்கூடிய 2.7 மீட்டர் நீளம் கொண்ட அந்த உலோகச் சாதனத்தை அவர்கள் கண்டனர் என்று கோலத் திரெங்கானு மாவட்டப் போலீஸ் தலைவர் அஸ்லி முகமது நோர் நேற்று தெரிவித்தார்.
எழுபது கிலோ கிராம் எடை கொண்ட அச்சாதனத்தை வெடிகுண்டுச் செயலிழப்பு
நிபுணர்கள் சோதனையிட்டனர். ஏராளமான மின்கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த அச்சாதனம் கடலடி ஆய்வுக்காகப் பயன்படுத்தக் கூடியதாகும். அதன் மதிப்பு பத்து லட்சம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என அஸ்லி சொன்னார்.
அச்சாதனம் ஆபத்தான கதிர்வீச்சு எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பது பரிசோதனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது என்றும் அவர் விவரித்தார்.
அச்சாதனத்தின் சொந்தக்காரர் யார் என்பதை அடையாளம் காணும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அது அலைகளினால் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அச்சாதனம் மீது எந்தவொரு நிறுவனத்தின் பெயரோ முத்திரையோ காணப்படவில்லை. அது உள்ளூர் பல்கலைக்கழகமொன்றுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
Sebuah objek logam berbentuk torpedo ditemui di Pantai Seberang Takir, Terengganu, namun disahkan bukan bahan letupan. Objek seberat 70kg itu dipercayai digunakan untuk kajian dasar laut dan dianggarkan bernilai RM1 juta. Pihak berkuasa masih menyiasat pemiliknya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *