45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணி!
- Muthu Kumar
- 22 Sep, 2024
45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு வாரங்களாக போட்டிகள் நடைபெற்று வந்தது.11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் ஓபன் ஆடவர் பிரிவில் 197 அணிகளும் மகளிர் பிரிவில் 183 அணிகளும் பங்கேற்றுள்ளன.
இந்திய ஓபன் ஆடவர் பிரிவில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.அதேபோல், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ஹரிகா துரோணோவள்ளி, வந்திகா அகர்வால், தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் உள்ளனர்.
சுவிஸ் முறையில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி துவக்கம் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் இதுவரை பத்து சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முதலிடத்தில் உள்ளன.
இதில் நேற்று இரவு நடைபெற்ற ஆடவருக்கான 10 வது சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி தலா ஒரு புள்ளிகளையும் விதித் குஜராத்தி 0.5 புள்ளிகளை பெற்றனர்.இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பது மட்டுமல்லாமல் தங்க பதக்கத்தையும் உறுதி செய்து விட்டது.ஆடவர் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற மகளிருக்கான பத்தாவது சுற்றில் இந்தியா சீனா அணிகள் மோதின இதில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் திவ்யா தேஷ்முக் ஒரு புள்ளிகளையும், வைசாலி, ஹரிக்கா துரோணவள்ளி மற்றும் தானியா சச்சித்தேவ் ஆகியோர் தலா 0.5 புள்ளிகளை பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.இன்று நடைபெறும் இறுதி சுற்றில் ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்கொள்ள உள்ளது. இதில் வென்று மகளிர் அணியும் தங்கப்பதக்கத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *