லங்காவி ஏரியில் மூழ்கி இந்திய சுற்றுப்பயணி பலி!

top-news
FREE WEBSITE AD

லங்காவி, மார்ச் 20-

லங்காவித் தீவின் டாயாங் புந்திங் ஏரியில் நீந்திக் கொண்டிருந்த வேளையில், இந்திய சுற்றுப்பயணி ஒருவர் மூழ்கி மாண்டார். நேற்று நண்பகல் 12.05மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. மரணமடைந்தவர் விவேக் அஷோக் (வயது 55) என்று அடையாளம் கூறப்பட்டது.

நண்பகல் 12.05மணிக்கு அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு மீட்புப்படை வீரர்கள் விரைந்து சென்றனர் என்று லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைவர் முகமது ஸம்ரி அப்துல் கனி குறிப்பிட்டார்.

விவேக்கின் சடலம் பிற்பகல் 2.29மணிக்கு மீட்புப்படையினரால் மீட்கப்பட்டது என்றார் அவர். அந்த இந்திய சுற்றுப்பயணி உயிர்காப்பு ஜாக்கெட் அணியாமல் ஏரியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது என்று முகமது ஸம்ரி கூறினார்.

அவரின் உடல் மேல்விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பிற்பகல் 3.21மணிக்கு மீட்புப் பணி முடிவுக்கு வந்தது. அச்சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை வெளியிடுவார்கள் என்றும் அவர் விவரித்தார்.


Seorang pelancong India, Vivek Ashok (55), lemas ketika berenang di Tasik Dayang Bunting, Langkawi. Kejadian berlaku pada 12.05 tengah hari, dan mayatnya ditemui pada 2.29 petang. Mangsa tidak memakai jaket keselamatan, dan polis akan mengeluarkan laporan rasmi mengenai insiden itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *