பெருநாளின்போது சொந்த ஊர் செல்லும் 12 லட்சம் பயணிகளுக்காக இந்தோனேசியாவில் 404 விமானங்கள் ஏற்பாடு!

- Muthu Kumar
- 21 Mar, 2025
ஜாகர்த்தா, மார்ச் 21-
இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக 404 விமானச் சேவைகளை இந்தோனேசிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள பொது போக்குவரத்து செயலகத்தை மேற்கோள் காட்டி ஷின்ஹுவா செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குத் திரும்புவோரின் வசதிக்காக 325 விமானங்கள் தேவைப்படும்
என நாங்கள்எதிர்பார்க்கிறோம். நாங்கள் தற்போது 404 விமானங்களைத் தயார் செய்துள்ள நிலையில் இதன் மூலம் பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை சமாளிக்க இயலும் என நம்புகிறோம் என்று
வான் போக்குவத்து செயலகத்தின் இடைக்காலத் தலைவர் லுக்மான் எப்.லைசா கூறினார்.
நோன்புப் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கடந்தாண்டு 55 லட்சத்து 29 ஆயிரத்து 659 பேராக இருந்த நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்து 61 லட்சத்து 86 ஆயிரத்து 298 பேராக உயர்வு காணும் என எதிர்பார்க்கிறோம் என அவர் கூறினார்.
இந்த பெருநாள் காலத்தில் உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 49 லட்சத்து 51 ஆயிரத்து 391 பேராகவும் அனைத்துலக பயணிகள் எண்ணிக்கை 12 லட்சத்து 34 ஆயிரத்து 907 பேராகவும் உயர்வு காணும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.இந்த பயணிகள் எண்ணிக்கை உயர்வை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து 60 விமான நிலையங்களிலும் தாங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளதோடு விமான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மோசமான வானிலையை எதிர்கொள்வதிலும் தயார் நிலையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Kerajaan Indonesia menyediakan 404 penerbangan bagi memenuhi permintaan pulang kampung sempena Aidilfitri. Jumlah penumpang dijangka meningkat 12% kepada 6.18 juta. Kawalan keselamatan di 60 lapangan terbang diperketat untuk menangani peningkatan penumpang dan cuaca buruk.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *