பேராக்கில் லாரி - கார் மோதியதில் ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, மார்ச் 21: இன்று  அதிகாலை, பேராக்கின் லெங்காங்கில் உள்ள செலாத்தான் பாகாரில் மாடுகளை ஏற்றி வந்த லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் 29 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூன்று பேர் லேசான காயமடைந்தனர்.

அதிகாலை 12.49 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர்  சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

இந்த விபத்தில் 30 வயதுடைய ஒரு பெண் மற்றும் ஓர் ஆண், இரண்டு வயது சிறுவன் ஆகியோர்  லேசான காயங்களுக்கு ஆளானார்கள்.

அவர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சுகாதார அமைச்சக ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட 29 வயது நபர், காரின் முன் இருக்கையில் சிக்கிக் கொண்டதாக அவர் கூறினார்.

அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபா ரோட்ஸி கூறினார்!

Seorang lelaki berusia 29 tahun maut dalam kemalangan antara lori membawa lembu dan sebuah kereta di Lenggong, Perak. Tiga lagi cedera ringan. Mangsa tersepit di tempat duduk depan dan disahkan meninggal dunia di lokasi sebelum diserahkan kepada pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *