பல்கலைக்கழக மாணவி கீர்த்தனாவுக்கு கத்திக் குத்து-வசீகரன் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

சுங்கை பட்டாணி, மார்ச் 25-

கெடா, சுங்கை பட்டாணி அருகே உயர்கல்விக் கழக மாணவி ஒருவரை கத்தியால் குத்தியதாக தன்மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை பதின்ம வயது இளைஞர் ஒருவர் நேற்று மறுத்தார். நீதிபதி ரோஸ்லான் ஹமீட் முன்னிலையில் பி.வசீகரன் (வயது 19) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார்.

கடந்த மார்ச் 17ஆம் தேதி காலை 10மணியளவில் கல்லூரி வளாகமொன்றில் பி. கீர்த்தனாவைக் கொலை செய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தண்டனைச் சட்டம் 307ஆவது பிரிவின்கீழ் வசீகரன் மீது அக்குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் போன்றவை விதிக்க அச்சட்டம் வகைசெய்கிறது.

வசீகரனுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை. மே மாதம் 14ஆம் தேதியன்று இவ்வழக்கு மீண்டும் நடைபெறும். அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) வான் ஃபிட்ரி வான் அசிஸான் முன்னிலையானார்.காலை 9.30மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த சந்தேகப் பேர்வழி கீர்த்தனாவின் முதுகுப் பகுதியில் பல தடவை கத்தியால் குத்தியதாக இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

கத்திக் குத்துக்கு ஆளான அம்மாணவி சுல்தானா அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். தன்னுடைய சகாக்கள் சிலருடன் நூலகமொன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் அத்தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது.அப்பெண் கீழே விழும் வரை அந்நபர் குத்தியுள்ளான். அப்போது நடைபெற்ற இழுபறியில் அந்த மாணவனின் கையிலும் காயங்கள் ஏற்பட்டன. கிளினிக்கில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவன் கைதுசெய்யப்பட்டான்.

Seorang remaja berusia 19 tahun mengaku tidak bersalah di Mahkamah Sesyen atas tuduhan menikam pelajar kolej pada 17 Mac. Dia tidak dibenarkan ikat jamin dan perbicaraan diteruskan 14 Mei. Mangsa mengalami kecederaan serius dan dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *