மியன்மார்-தாய்லாந்து பூகம்பத்தில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை!

- Muthu Kumar
- 30 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 30 -
மியன்மாரையும் தாய்லாந்தையும் உலுக்கி இருக்கும் மிகக் கடுமையான பூகம்பத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று. வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கிடைத்துள்ள தகவல்கள்படி, இவ்விரு நாடுகளிலும் உள்ள மலேசியர்கள் யாரும் அதில் காயமடையவோ பாதிப்படையவோ இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், சூழ்நிலைகளை தமது அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள மலேசிய தூதரகங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.“உதவிகள் தேவைப்படும் மலேசியர்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகளை வழங்கி வருவோம். ஆனால், இதுவரையில் மலேசியர்கள் யாரும்
பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
"மியன்மாரில், யங்கூனில் மலேசியர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனால், பூகம்பம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் நிகழ்ந்திருக்கிறது என்று முஹமட் தெரிவித்தார்.இந்நிலையில், மலேசியத் தூதரகங்களில் தங்களை பதிந்து கொள்ளுமாறு, அவ்விரு நாடுகளிலும் குறிப்பாக பூகம்பம் ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அருகில் வசிக்கும் மலேசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Menteri Luar Negeri, Datuk Seri Mohamad Hasan, mengesahkan bahawa rakyat Malaysia tidak terjejas dalam gempa bumi kuat yang melanda Myanmar dan Thailand. Kementerian terus memantau situasi serta bekerjasama dengan kedutaan bagi memastikan keselamatan rakyat Malaysia di kawasan terjejas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *