எலி விஷம் கலந்த தின்பண்டத்தை சாப்பிட்டு இறந்து போன இரண்டாவது சிறுவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

கூலிம், ஜூலை 13: எலி விஷம் கலந்த தின்பண்டங்களை சாப்பிட்டு இறந்த இரண்டு சிறுவர்களில் ஒருவரான இரண்டு வயது முஹம்மது லூத் சௌகி அப்துல் ரஹ்மான் உடல், அவரது சகோதரரின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பினாங்கு பொது மருத்துவமனையில் இருந்து இரவு 11.07 மணிக்கு உடல் கொண்டுவரப்பட்டது.

அடக்கம் செய்யும் நிகழ்ச்சிக்கு முன்னதாக இறுதிச் சடங்குகளுக்காக கல்லறைக்கு அடுத்துள்ள ச லெபாய் அகமட் பள்ளிவாசலுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் அவரது தாயார், நுரைன் ஹஸ்னோரிசல், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுமார் 300 பேர் துக்கத்துடன் இருந்தனர்.
லூத்தின் உடல் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டு அவரது சகோதரரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டபோது நுரைன் கண்ணீர் மல்க மகனை வழி அனுப்பி வைத்தார்.

இரவு 11.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன.

லூத்தின் சகோதரர் முஹம்மது அகில் சௌகி, எலி விஷத்தை உட்கொண்டதால் இறந்த பிறகு, துக்கமடைந்த குடும்பத்திற்கு இரண்டு நாட்களில் நடந்த இரண்டாவது சோகம் இது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *