நிதி மேலாளரை மோசடி செய்து ரிம364,274 இழப்பு-ஜொகூர் போலீசார் எச்சரிக்கை!

- Muthu Kumar
- 27 Mar, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, மார்ச் 27-
ஜொகூரில் 54 வயது நிதி மேலாளர் ஒருவர் இணைய பங்கு முதலீட்டு மோசடிக்கு உள்ளாகி ரி.ம364,274 இழந்துள்ளதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்தார்.
இந்த மோசடி 23 டிசம்பர் 2024ஆம் ஆண்டு தொடங்கியது. பாதிக்கப்பட்ட நபர் ஃபேஸ்புக்கில் முதலீடு பற்றிய விளம்பரத்தை பார்த்தபோது. உயர்ந்த லாபத்திற்கான வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு, அவர் தரப்பட்ட இணைப்பை கிளிக் செய்துள்ளார். இதனை தொடர்ந்து, 17 பிப்ரவரி 2025 முதல் 21 மார்ச் 2025 வரை மூன்று வங்கி கணக்குகளில் 12 முறை பரிவர்த்தனை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் முதலீட்டில் இருந்து அதிக லாபம் பெற இன்னும் பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், பின்னர் லாபம் எடுக்க முடியாமல் தவித்து, தன்னை மோசடி செய்துவிட்டதாக உணர்ந்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இதில் தொடர்புடைய இரண்டு வங்கிக் கணக்குகள் ஏற்கெனவே முதலீட்டு மோசடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரணை செய்யப்படுகின்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
போலீசார் பொதுமக்கள் எளிதில் உயர்ந்த இலாபம் தரும் முதலீட்டுப் பங்குகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். எந்த முதலீட்டிற்கும் முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான முதலீடு பற்றிய தகவல்கள் உடனே அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தங்களை முதலீட்டு மோசடிகளில் இருந்து பாதுகாக்க, மலேசிய பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில் முதலீட்டாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, தனிப்பட்ட வங்கி விவரங்களை யாருக்கும் பகிராமல் இருக்க, பொய்யான லாப வாக்குறுதிகளை நம்பாமல் இருக்க, மற்றும் "Semak Mule" போர்டலை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான கணக்குகளை சரிபார்க்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மோசடிக்குள்ளானவர்கள் உடனடியாக தேசிய மோசடி எதிர்ப்பு மையம் 997 என்ற எண்ணை அழைத்து புகாரளிக்கலாம் எனத் தெரிவித்தார்.
Seorang pengurus kewangan di Johor rugi RM364,274 akibat penipuan pelaburan saham dalam talian. Mangsa tertarik dengan iklan di Facebook dan membuat 12 transaksi. Polis menasihatkan orang ramai menyemak kesahihan pelaburan dan melaporkan penipuan ke pusat 997.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *