செமினி பொது மண்டபத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் கோலலங்காட் இடைநிலை பள்ளி வெற்றி!
- Muthu Kumar
- 21 Oct, 2024
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், அக். 21-
சிலாங்கூர் மாநில அளவில் இடைநிலைப்பள்ளிகளில் கற்றுவரும் இந்திய மாணவர்களுக்கிடையிலான கபடிப் போட்டியில் கோலலங்காட் மாவட்ட இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த போட்டிகளில் வென்று முதலிடத்தில் வாகை சூடினர்.
கடந்த 15.10.2024 முதல் 17.10.2024 வரை மூன்று தினங்கள் செமினி பொது மண்டபத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் கோலலங்காட் மாவட்டத்தைப் பிரதிநிதித்து 6 கபடிக் குழுவினர் களத்தில் இறங்கி வெற்றி பெற்று பெருமையைத் தேடித் தந்துள்ளனர் என்று மாவட்ட கபடி தொழில்நுட்ப பயிற்றுநரும் பந்திங் இடைநிலைப் பள்ளி ஆசிரியருமான மதிவாணன் தெரிவித்தார்.
கபடிப் போட்டி 12 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவிலும் 15 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் பிரிவிலும் போட்டியாளர்கள் முதலிடத்தில் வென்றதாக அவர் கூறினார். அதே வேளையில், 12க்கும் கீழ்ப்பட்ட வயதில் ஆண்கள் பிரிவில் இரண்டாம் நிலையிலும், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலையிலும், மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலையிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கபடிப் போட்டியில் சிறந்த விளையாட்டாளராகத் தேர்வு செய்யப்பட்ட சஸ்விண்டர் தியாகராஜன், விவிலியன் மெர்சி விக்டர், கனிமொழி ஆனந்த், சூரியசங்கர் சுப்பையா, நிவாஸ் முருகன், கயல்வழி வாசு மற்றும் ஸ்ரேயா குமரன் ஆகியோர் மேடையில் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *