14 வயது சிறுமி மானபங்கம் சந்தேகத்தில் போலீஸ்காரர் கைது!

- Muthu Kumar
- 24 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 24-
சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஓர் ஓட்டலில் 14 வயது நிரம்பிய ஒரு சிறுமியை மானபங்கள் செய்ததாக கூறப்பட்டது தொடர்பிலான ஒரு விசாரணைக்கு உதவுவதற்காக போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் சுபாங் ஜெயா, ஜாலான் யூஏஸ்ஜே, சென்ரல் 1இல் உள்ள ஓர் ஓட்டலில் அப்போலீஸ்காரர் அக்குற்றத்தைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.அச்சம்பவம் தொடர்பில் தாங்கள் புகார் ஒன்றைப் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் விசாரிக்கப்பட்டு வருவதாக, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சித்தி கம்சியா ஹசான் தெரிவித்தார்.
"குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 354கின் கீழ், அச்சந்தேகப்பேர்வழி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்" என்றும் சித்தி கம்சியா தெரிவித்தார்.அச்சம்பவம் நடப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தையுடன் சேர்ந்து அவரைத் தேட போலீஸ்காரர் ஒருவர் சென்றதாகவும் அன்றிரவு 11.40 மணியளவில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உள்ள ஓர் அறைக் கதவை தட்டுவதற்கு முன்னர், தமக்குத் தெரிந்த ஆடவன் ஒருவனுடன் அந்த 14 வயது சிறுமி தங்கி இருந்ததாகவும் ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி தகவல் தெரிவிக்கப்பட்டது.
சோதனை செய்யப்பட்ட பின்னர், தம்முடன் தங்கியிருந்த போலீஸ்காரரால் தாம் மானபங்கள் செய்யப்பட்டதாக கூறிய அச்சிறுமி, அதன் பின்னர் மேல்நடவடிக்கைக்காக போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
Seorang pegawai polis ditahan bagi membantu siasatan kes gangguan seksual melibatkan seorang remaja perempuan berusia 14 tahun di sebuah hotel di Subang Jaya. Suspek ditahan selepas mangsa membuat laporan polis. Kes disiasat di bawah Seksyen 354 Kanun Keseksaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *