தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும் போலீஸ் உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள்!

- Muthu Kumar
- 26 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 26-
நாட்டின் அமைதி, நல்வாழ்வை உறுதி செய்வதில் தியாகத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கடமையாற்றும், அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதோடு, மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றிய போலீஸ் படையின் ஓய்வு பெற்றவர்களின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அவர் பாராட்டினார்.
கால நேரத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு பிடிஆர்எம் உறுப்பினரும் பாதுகாப்புப் படையின் முன்னிலைப் பணியாளர்களாக உள்ளதாக நேற்று 218ஆவது போலீஸ் தினத்தில் சுல்தான் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார். நாட்டின் பொது அமைதியைப் பேணுவதற்காக, சட்டத்தை அமல்படுத்துவதுடன், குற்ற அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்க தங்களின் உயிரைப் பணயம் வைக்கும் போலீஸ் உறுப்பினர்களை இன்று தமது முகநூல் பதிவில் சுல்தான் இப்ராஹிம் பாராட்டினார். போலீஸ் பணி என்பது அவ்வளவு எளிதானதல்ல.
மாறாக, முழு அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் அக்கறை ஆகியவை அதற்கு மிகவும் முக்கியமானதாகும்.இரவு பகல் பாராமல் சேவையாற்றும் பிடிஆர்எம் உறுப்பினர்களின் அனைத்து முயற்சிகளுக்கும், சேவைக்கும் பொதுமக்களும் மதிப்பளிப்பதாக மாமன்னர் கூறினார்.
Yang di-Pertuan Agong Sultan Ibrahim mengucapkan tahniah kepada anggota PDRM sempena Hari Polis ke-218 atas pengorbanan mereka menjaga keamanan negara. Baginda turut menghargai jasa pesara polis dan menekankan kepentingan keberanian serta dedikasi dalam menjalankan tugas tanpa mengira waktu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *