டோல் கட்டணக் கழிவு இன்று அறிவிக்கப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 26-

இன்று நடைபெறும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணக் கழிவு குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து கருத்து கேட்டபோது, பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி இதனைத் தெரிவித்தார்.

“போல் கட்டணக் கழிவு குறித்த அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அது குறித்து அறிவிக்கப்படக் கூடும்" என்று. தமது அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரியில் கொண்டாடப்பட்ட சீனப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட அதே 50 விழுக்காடு கட்டணக் கழிவு இப்பெருநாளுக்கும் வழங்கப்படக் கூடும் என்று கடந்த வியாழக்கிழமை அலெக்சாண்டர் கோடிகாட்டி இருந்தார்.

"சீனப் புத்தாண்டின்போது நாங்கள் செய்ததுபோல். நோன்புப் பெருநாளுக்கும்  கட்டணக் கழிவை நாங்கள் நிச்சயம் வழங்குவோம். நோன்புப் பெருநாளுக்கும் அதே கட்டணக் கழிவை வழங்குவோம். அதன் தொடர்பான அறிவிப்புக்காக இன்னும் ஒரு சில நாட்களுக்கு காத்திருங்கள். அதை நாங்கள் விரைவில் அறிவிப்போம்
என்றும் அவர் கூறியிருந்தார்.

சீனப் புத்தாண்டின்போது 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்பட்டதனால், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைக் குத்தகை நிறுவனங்களுக்கு அரசாங்கம் 2 கோடியே 80 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்கி இருந்தது.மலேசிய முஸ்லிம் சகோதரர்கள் இம்மாதம் 31ஆம் தேதி நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் அரசாங்கம், மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் தங்களின் மதம் சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல, குறிப்பிட்ட சில தினங்களுக்கு முழு கட்டணக் கழிவை வழங்கி இருந்தது.ஆனால், இவ்வாண்டு முதல், 50 விழுக்காடு வரையில் மட்டுமே கட்டணக் கழிவை அரசாங்கம் வழங்கத் தொடங்கி இருக்கிறது.

Kerajaan dijangka mengumumkan diskaun tol sempena Hari Raya selepas mesyuarat Kabinet hari ini. Menteri Kerja Raya, Alexander Nanta Linggi, menyatakan kemungkinan diskaun 50% seperti Tahun Baru Cina. Kerajaan sebelum ini memberi pampasan RM2.8 juta kepada syarikat konsesi lebuh raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *