ஆலய விவகாரத்தை வீண் சர்ச்சையாக்காதீர்கள்! அதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 22: கோலாலம்பூரில்‌ 130 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயத்தை இடமாற்றம்‌ செய்யும்‌ உத்தேச நடவடிக்கை குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில்‌, அனைத்துத்‌ தரப்பினரும்‌ அமைதி காக்க வேண்டும்‌ என்று பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ அறிவுறுத்தியுள்ளார்‌. அந்த ஆலயம்‌ அமைந்திருக்கும்‌ நிலம்‌ கடந்த 2012 ஆம்‌ ஆண்டில்‌ ஜாக்கேல்‌ டிரேடிங்‌ செண்டிரியான்‌ பெர்ஹாட்‌ நிறுவனத்திடம்‌ விற்கப்பட்டது.

அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அந்நிறுவனம் பள்ளிவாசலொன்றை நிர்மாணிக்க உத்தேசித்திருப்பதை பல்வேறு தரப்பினர்‌ ஆட்சேபித்துள்ளனர்‌. அந்த நிலத்தில்‌ பள்ளிவாசலை நிர்மாணிக்கும்‌ முடிவுக்கும்‌ அரசாங்கத்திற்கும்‌ எந்த தொடர்பும்‌ இல்லை என்பதை அன்வார்‌ நேற்று தெளிவுபடுத்தினார்‌.

அந்நிலத்தின்‌ உரிமையாளர்களான அந்நிறுவனம்தான்‌ அங்கு பள்ளிவாசலைக் கட்டுவதற்கு உத்தேசித்துள்ளது என்று அவர்‌ கூறினார்‌. முஸ்லிம்‌ சமூகம்‌ உட்பட எந்தவொரு தரப்பினரும்‌. தேவையற்ற முறையில்‌ நடந்து கொள்ளாதிருந்தால்‌ இந்த விவகாரத்தை நம்மால்‌ முறையாகக்‌ கையாள முடியும்‌ என்று கேஎல்‌ஐஏ விமான நிலையம்‌ அருகே உள்ள சுல்தான்‌ அப்துல்‌ சமாட்‌ பள்ளிவாசலில்‌ வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்‌ பின்னர்‌ செய்தியாளர்களிடம்‌ அன்வார்‌ குறிப்பிட்டார்‌.

ஏற்கெனவே திட்டமிட்டபடி பள்ளிவாசல்‌ நிர்மாணிக்கப்படும்‌. ஆலயத்திற்கான நிலம்‌ வழங்கப்படும்‌. பிரதமர்‌ எனும்‌ வகையில்‌ எந்தவொரு ஆலயத்தையும்‌ சமயத்‌ தலத்தையும்‌ தகர்க்கும்படி உத்தரவிடுவேன்‌ என்று என்னால்‌ கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்றார்‌ அவர்‌.

அதுவொரு பழைய ஆலயம்‌. ஆனாலும்‌, அது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததாகும்‌. இருந்தாலும்‌, நல்லிணக்கத்தைப்‌ பேணிவர வேண்டும்‌ என்பதற்காக நிலத்தின்‌ உரிமையாளரான அந்நிறுவனம்‌ தேவைப்படும்‌ சில உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. அதே வேளையில்‌, பிரச்சினைகளைத்‌ தவிர்ப்பதற்காக கோலாலம்பூர்‌ மாநகர்‌ மன்றமும்‌ மாற்று இடத்தை அடையாளம்‌ கண்டுள்ளது என்று அன்வார்‌ தெரிவித்தார்‌. பள்ளிவாசலை நிர்மாணிக்கும்‌ பணியைத்‌ தொடங்க 2021ஆம்‌ ஆண்டிலேயே தங்களுக்கு அனுமதி கிடைத்திருந்தாலும்‌, ஆலயத்தை இடமாற்றம்‌ செய்யாத காரணத்தால்‌ நிர்மாணிப்புப்‌ பணி தாமதமடைந்துள்ளது என்று ஜாக்கேல்‌ டிரேடிங்‌ நேற்றுமுன்தினம்‌ தெரிவித்திருந்தது. ஆலயத்திற்கான மாற்று இடம்‌ அடையாளம்‌ காணப்பட்டுள்ளது என்றும்‌ இடமாற்றம்‌ செய்யப்படும்‌ வரையில்‌ அது உடைக்கப்படாது என்றும்‌ கோலாலம்பூர்‌ மாநகர்‌ மன்றம்‌ வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

எனவே, ஆலயத்தை இடமாற்றம்‌ செய்வதில்‌ சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர்‌ இந்த விவகாரத்தை சுமுகமான முறையில்‌ தீர்ப்பதற்கு வழிகாண வேண்டும்‌ என்று அன்வார்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

தற்போதைய நிலவரத்தை எவரும்‌ தங்களுக்குச்‌ சாதகமாக பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டாம்‌ என்றும்‌ அவர்‌ நினைவுறுத்தினார்‌. இந்து சமய நடவடிக்கைகளில்‌ சம்பந்தப்படாத வழக்கறிஞர்கள்‌ உள்ளிட்ட சமய சந்தர்ப்பவாதிகள்தான்‌ பிரச்சினைக்கு காரணமாக உள்ளனர்‌. அந்நபர்கள்‌ தங்களை வீரர்கள்‌ போல்‌ முன்னிறுத்திக்‌ கொண்டு ஆலயம்‌ உடைபடும்‌ அபாயத்தில்‌ இருப்பதாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்‌ என்றும்‌ அன்வார்‌ சுட்டிக்காட்டினார்‌!

Sebuah Kuil yang berusia 130 tahun di Kuala Lumpur menghadapi isu pemindahan setelah tanahnya dijual pada 2012. PM Anwar menyeru semua pihak bertenang, menegaskan kuil akan diberikan lokasi baru dan meminta agar isu ini tidak dimanipulasi oleh pihak berkepentingan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *