காஸாவில் நடந்துவரும் அட்டூழியங்களை கண்டு மௌனம் சாதிக்க வேண்டாம்-அன்வார்!

- Muthu Kumar
- 18 Mar, 2025
கோலாலம்பூர்:
காஸாவில் கொடூரமான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட மாப்பிம் எனப்படும் இஸ்லாமிய அமைப்புகளுக்கான மலேசிய ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த எட்டு மனிதாபிமானப் பணியாளர்களுக்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர்களின் இழப்பு மாப்பிமுக்கு மட்டுமல்ல, நீதி மற்றும் மனிதநேயத்திற்காகப் போராடும் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க அடி என்று அவர் கூறினார்.அவர்கள் மனிதாபிமான நாயகர்கள், அவர்கள் ஒடுக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ அயராது தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
எனவே, அத்தகையவர்களின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, காஸாவில் நடந்துவரும் அட்டூழியங்களை கண்டு மௌனம் சாதிக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்வதாக அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Timbalan Perdana Menteri, Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi, mengucapkan takziah atas kematian lapan sukarelawan MAPIM dalam serangan udara di Gaza. Beliau menggesa masyarakat antarabangsa tidak berdiam diri terhadap kekejaman yang berlaku di Gaza.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *