சமூக ஊடகப் பதிவுகளில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தாதீர்கள்! - அமைச்சு அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 21 : சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக, பள்ளி மாணவர்களை கல்வியாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற நபர்களால், குழந்தை பாலியல் குற்றங்கள் உட்பட இதுபோன்ற உள்ளடக்கம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் முகங்கள் அல்லது பெயர்களைத் தங்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினால், பாதுகாப்பு, தனிப்பட்ட தரவு மற்றும் பல்வேறு சிக்கல்கள் எழக்கூடும் என்று அவர் நினைவுறுத்தினார்

இணையம் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த விஷயத்தில் தனது அமைச்சு கல்வி அமைச்சுடன்  தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை உள்ளடக்கிய உள்ளடக்கத்தை உருவாக்க டிக்டோக்கைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.

Menteri Komunikasi, Fahmi Fadzil, menegaskan guru tidak boleh menggunakan pelajar untuk kandungan media sosial kerana ia boleh disalahgunakan, termasuk untuk eksploitasi seksual. Beliau mengingatkan agar identiti pelajar tidak didedahkan dan menggesa guru, terutama sekolah rendah, menghentikan penggunaan TikTok melibatkan pelajar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *