கூகுள் மேப்ஸ், வேஸில் இந்து ஆலயங்களை சர்ச்சை குறித்து விசாரிக்கப்படுகிறது!

- Muthu Kumar
- 06 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்.6-
கூகுள் மேப்ஸ், வேஸில் இந்து ஆலயங்களை சட்டவிரோதமானது என முத்திரை குத்திய விவகாரம் சட்டம் 588 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.தேசிய போலீஸ்படையின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை இதனை கூறினார்.
இவ்விவகாரத்தை போலீஸ் தகவல் தொடர்பு பல்லூடக சட்டம் (சட்டம் 588) இன் விசாரணை நடத்தி வருகிறது. இது இணைய துஷ்பிரயோகமாகும்.தேச நிந்தனைக் கூறுகள் இருந்தால் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும். மேலும் இது உள்ளடக்கத்தைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.
முன்னதாக் உரிமை கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல், கூகுள் மேப்ஸில் உள்ள இந்து கோயில்களில் உள்ள சட்டவிரோத கோவில்கள் என்ற முத்திரையை அகற்ற கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.கூகுளின் கீழ் இயங்கும் வேஸில் நடத்திய சோதனையில், சட்டவிரோத கோயில் என்ற முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டவிரோதமானதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புடைய ஒரு பேஸ்புக் குழுவின் நிர்வாகிக்கு தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் சம்மன் அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பிரச்சினை எழுந்தது.தலைநகரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றி. பள்ளிவாசல் கட்டுவதற்கு வழி வகுக்கும் திட்டத்தைத் தொடர்ந்து, இந்து கோயில் நிலப் பிரச்சினை சமீபத்திய விவாதப் பொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Isu label “tidak sah” pada kuil Hindu dalam Google Maps dan Waze disiasat di bawah Akta Komunikasi dan Multimedia 1998 (Akta 588). Polis menyiasat kemungkinan penyalahgunaan internet dan hasutan. Kerajaan digesa bekerjasama dengan Google untuk membetulkan isu ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *