தீபாவளியை முன்னிட்டு செமினி யுனைடெட் கால்பந்து அகாடமியின் கால்பந்து போட்டி!

top-news
FREE WEBSITE AD

(ரவி முனியாண்டி)

செமினி, நவ.6-

தீபாவளியை முன்னிட்டு செமினி யுனைடெட் கால்பந்து அகாடமி தனது கழக உறுப்பினர்களுக்கிடையிலான கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த அகாடமி கடந்த 2006ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு 18 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த கால்பந்து போட்டி நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்குவிப்பதற்கு ஆகும். இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில ரீதியிலான போட்டிகளில் குறிப்பாக பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர் என்று இந்த அகாடமியின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான ஜோன் தெரிவித்தார்.

இந்த விளையாட்டுப் போட்டி வயதுக்கு ஏற்றாற் போல் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கிண்ணம், சான்றிதழ், காலுறை ஆகியவை வழங்கப்பட்டன.அதே நேரத்தில் இந்த அகாடமி தோற்றுவிப்புக்கு அதன் ஆலோசகரும் எம்எஸ்டி குளோபல் இன்ஜினியரிங் சென். பெர். உரிமையாளருமான எம்.தினகரன் மிகவும் பக்கபலமாக இருந்தார். குறிப்பாக ஜெர்சி, பந்து உட்பட விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி மேலும் பல உதவிகளையும் செய்துள்ளார். இந்த வேளையில், அவருக்கு அகாடமியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிகழ்வை டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ், உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியும் பிகேஆர் உலு லங்காட் தொகுதித் தலைவருமான ராஜன் முனுசாமி ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர். இவர்களுடன் இணைந்து காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களான சந்திரன் ராமசாமி, ராமசந்திரன் அர்ச்சுனன், டயானாஸ் கேட்ரஸ் உரிமையாளர் பி.எம்.சாமி, செமினியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி மற்றும் செமினி இந்திய சமூகத் தலைவர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், ராஜன் உரையாற்றிய போது ஜோன் இவ்வாறு ஓர் அகாடமியை வழிநடத்துவது ஒன்றும் சுலபமான விஷயமல்ல. அவருக்கு இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் 140 மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்குவிப்பது நல்ல ஒரு முயற்சியாகும். இதில் 6 முதல் 18 வயது வரையிலான இவர்களைத் தலைசிறந்த விளையாட்டாளர்களாக உருவாக்குவதற்கு இந்த அகாடமி வழி வகுத்து வருகிறது. இந்த அகாடமி வழி மாவட்ட, மாநில, தேசிய ரீதியிலான விளையாட்டுகளில் இந்திய மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.செமினியைச் சேர்ந்த குணாளன், குருசாமி போல் இன்னும் பல விளையாட்டாளர்கள் மாநில, தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கேற்று நம் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் களமிறக்கப்பட வேண்டும் என்று ராஜன் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *