நீலாய் எம்பிஜே ரிசோர்சஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்!

top-news
FREE WEBSITE AD

(வீ.இராஜேந்திரன்)

நீலாய். மார்ச் 22-

தாமான் செமாராக்கில் அமைந்துள்ள எம்பிஜே ரிசோர்சஸ் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அந்நிய நாட்டவர்கள் மிகுந்த கண்காணிப்புடன் கவனிக்கப்படுவர் என்று ரெப்பா சட்டமன்றம் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார். அந்த நிறுவனத்தின் சிறப்பு அழைப்பாளராக வருகைதந்த அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றியபோது மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.

ஜபாத்தான் தெனாகா கெர்ஜா (ஜேடிகே) இலாகா அந்நியத் தொழிலாளர்கள் பணியிடத்தில் வரம்பு மீறிச் செயல்படும் நடவடிக்கைகளை அவ்விலாகா தொடர்ந்து கண்காணித்து வரும் என்று கூறினார்.நெகிரி மாநில அளவில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில தொழிலாளர்  இலாகா உயர் அதிகாரி ரோஸ்லான் பஹாரி மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 Pekerja asing di syarikat MPJ Resources,Nila akan dipantau dengan ketat, kata Ahli Dewan Undangan Negeri Repah, S. Veerapan. Jabatan Tenaga Kerja (JTK) terus mengawasi pematuhan peraturan, manakala langkah keselamatan di tempat kerja akan dipertingkatkan bagi semua pekerja.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *