10 ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் நிச்சயம் இடம் உண்டு! - அன்வார் உறுதி

top-news
FREE WEBSITE AD

சிம்மோர்‌, ஜூலை 9: தம்புன்‌ தொகுதி இந்தியர்கள்‌, நான்‌ பிரதமராக வருவதற்கு.பெரும்‌ துணை புரிந்தவர்கள்‌. அவர்கள்‌ செய்த உதவிக்கு கைம்மாறாக இங்குள்ள.3 பெரிய கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. பிரதமர்‌ இந்தியர்‌நலனுக்கு துணைபுரியவில்லை என்று ஒரு சில பொறுப்பற்றவர்கள்‌. வதந்தியை உருவாக்கி வருகின்றனர்‌.

நான்‌ அனைவருக்கும்‌ பிரதமராக சேவையாற்றி வருகிறேன்‌ என்று தம்புன்‌ இந்திய சமூகத்தினரை சந்தித்த போது பிரதமர்‌ கூறினார்‌. இந்நாட்டு இந்திய மக்கள்‌ நலன்‌ கருதி மித்ரா, அமானா இக்தியார்‌, தெக்கூன்‌.திவெட்‌,  பெட்ரோனாஸ்‌ வாயிலாக உதவிகள்‌ செய்து வருகிறோம்‌. இந்த அரசாங்க ஏஜென்சிகள்‌ வாயிலாகத் தொடர்ந்து உதவிகள்‌ நல்கப்பட்டு வருவதை அவர்‌ சுட்டிக்காட்டினார்‌.

இந்நாட்டில்‌ தமிழ்மொழிக்கு எந்தவொரு தடையும்‌ இல்லை. அதுபோலவே மற்ற  மொழிகளுக்கும்‌ எந்தத் தடையும்‌ கிடையாது. அதிகமான மொழிகளை மக்கள்‌ பயின்றால்‌, அனைவருக்கும்‌ நன்மையே. ஆகவே, அவரவர்‌ மொழியை வளப்படுத்தும்‌ திட்டங்களை: பொதுமக்கள்‌ வரையறுத்துச் செயல்படும்படி அவர்‌ வலியுறுத்தினார்‌.

பல இன மக்கள்‌ வாழும்‌ நாட்டை நிர்வகிப்பதில்‌ அனைவரின்‌ நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும்‌. இவற்றில்‌ குழப்பத்தை உருவாக்கும்‌ பொறுப்பற்றவர்கள்‌, குடும்ப அரசியல்‌ நடத்தும்‌ சுயநலவாதிகள்‌ ஆகியோர்‌ மக்களைக் குழப்பி வருவதாக அவர்‌ எச்சரித்தார்‌.

எஸ்‌.பி.எம்‌. தேர்வில்‌ 10ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும்‌ மெட்ரிகுலேஷனில்‌. நிச்சயமாக இடம்‌ கிடைக்கும்‌. அதற்குக் குறைவாக கிடைத்தவர்கள்‌ மனு செய்யலாம்‌. ஆகவே, இவ்விவகாரம்‌ குறித்து நன்கு அறிந்து பின்‌ கருத்துரைக்க முன்‌ வாருங்கள்‌ என்று பிரதமர்‌.  கேட்டுக்கொண்டார்‌.

இந்நிகழ்வில்‌, தஞ்சோங்‌ ரம்புத்தான்‌ சமயபுர மாரியம்மன்‌ ஆலயத்திற்கு 250,000. ரிங்கிட்‌, ஜெலப்பாங்‌ நடராஜர்‌ ஆலயத்திற்கு 142,000 ரிங்கிட்டும்‌, மேரூராயா ஸ்ரீ மகா  காளியம்மன்‌ ஆலயத்திற்கு 155,000 ரிங்கிட்டும்‌ மானியம்‌ வழங்கினார்‌ பிரதமர்‌.

சத்தியசீலா' தமிழ்ப்பள்ளிக்கு பேருந்து நிதியுதவி, செல்லம்மாவுக்கு புதிய வீடு கட்டித்‌ தரப்பட்டுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *