போர்ட்டிக்சன் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான திடல்தடப் போட்டி!

- Muthu Kumar
- 26 Nov, 2024
போர்ட்டிக்சன், நவ. 26-
போர்ட்டிக்சன் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடை யிலான திடல்தடப் போட்டி, போர்ட்டிக்சன் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இணை ஏற்பாட்டில் செங்காங் தமிழ்ப்பள்ளித் திடலில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள 17 தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த 312 மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இராஜசேகரன் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சிறப்பான முறையில் ஈடுபடுவது கட்டொழுங்கை மேம்படுத்தும் என்றார்.தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வு நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். நிகழ்வு பள்ளிகளின் அணிவகுப்பு தீப்பந்த ஒட்டத்துடன் தொங்கியது.
மாணவர்கள் 100மீ, 200மீ,80மீ தடை ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மற்றும் 200 மீட்டர் அஞ்சல் ஓட்டம்,1600மீ நடைபோட்டி, 1200மீ ஓட்டம் என பல பிரிவுகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.நிறைவுரையாற்றிய நெகிரி செம்பில செம்பிலான் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் ஜெயபாலன் கந்தையா, ஏற்பாட்டுக் குழுவினை வெகுவாகப் பாராட்டினார்.மாணவர்களுக்கு மிகவும் பயனான நிகழ்வாக இது அமைந்திருந்தது என்றார். மாணவர்கள் இதே ஆர்வத்தை இடைநிலைப்பள்ளிகளிலும் தொடர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இப்போட்டியின் இறுதியில் 8 தங்கங்களுடன் போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி முதல் நிலையிலும் 5 தங்கங்களுடன் சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையிலும் 4 தங்கங்களுடன் செங்காங் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையிலும், 3 தங்கங்களுடன் முறையே தானாமேரா தமிழ்ப்பள்ளி நான்காம் நிலையிலும் லின்சம் தமிழ்ப்பள்ளி ஐந்தாம் நிலையிலும் வாகை சூடின. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிக்கான சுழற்கிண்ணத்தை செங்காங் தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
10 வயதுக்கான சிறந்த விளையாட்டாளர்களாக சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவி கலாவதி ஆதிமூலமும் போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி மாணவன் ஹிமானிஷ் ஜீவராஜும் தேர்வு பெற்றனர். சிறந்த விளையாட்டாளராக சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர் நர்மதன் தமிழரசனும் சிறந்த பெண் விளையாட்டாளராக செங்காங் தமிழ்ப்பள்ளி மாணவி நிஷா ராஜாவும் தேர்வு பெற்றனர். இந்நிகழ்வில் தொழிலதிபர் டத்தோ நடராஜா, திருமதி கோமதி லெட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலக உதவி அதிகாரிசத்யபிரபு குமார் மற்றும் 200 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *