முட்டாள்…. போ... குப்பைத் தொட்டி அருகில் உட்கார்! மலாய் பேசவில்லை என்பதற்காக மாணவனிடம் இனவாதம் பேசிய ஆசிரியை!

- Shan Siva
- 22 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 22: இனவெறி கருத்து தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஓர் ஆசிரியை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமூக ஊடகங்களில்
வெளியான ஒரு ஆடியோ பதிவின் அடிப்படையில், கடந்த வாரம் பேராக்கி உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியையின் செயல் ஆசிரியர்
இனத்திற்கே அவமானத்தைச் சேர்த்துள்ளது.
அந்த ஆடியோவில், 13 வயது மாணவரை அவமதித்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகக்
கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட ஆசிரியை
அந்த மாணவரை முட்டாள் என்று குறிப்பிடப்படும் 'போடோ' என்ற வார்த்தையைப்
பயன்படுத்தியதாகவும், மேலும் குப்பைத் தொட்டி
அருகில் போய் உட்கார்ந்துகொள் என்று ஆத்திரப்பட்டதாகவும், அதோடு, 'சீனாவுக்குத்
திரும்பிச் செல்லுங்கள்' என்று
கூறியதாகவும் சீனா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவருக்கு மலாய் மொழியைப் பேசவோ புரிந்துகொள்ளவோ
முடியாததால் ஆசிரியர் இந்த செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத்
தொடர்ந்து, மாணவர் தனது
பெற்றோரிடம் கூறியதாக நம்பப்படுகிறது, அதன் பிறகு அம்மாணவியின் உறவினர் ஆசிரியரை அழைத்த்து பேசிய அலை பேசி உரையாடலின்
ஒலிப்பதிவுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.
உரையாடலில்,
ஆசிரியர் இந்த சம்பவத்தை ஒத்துக்கொண்டதோடு, இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.... நான் மட்டுமா சொல்கிறேன்... பலரும்தான் சொல்கிறார்கள்... இதுவரைக்கும் எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் திமிர்ப்
பேச்சு பேசுகிறார்.
அதோடு, அம்மாணவரின் பெற்றோர்களும் ‘சீனாவுக்குத் திரும்பிச் செல்ல
வேண்டும்’ என்று கூறுகிறார்.
மாணவரின்
பெற்றோருக்கு மலாய் பேசத் தெரியாவிட்டால், அவர்களும் சீனாவுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மலேசியர்கள்
ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும் என்று போனில் பேசிய மாணவியின் உறவினர் நியாயப்படுத்த, ஆசிரியர் மேலும் கோபமடைந்து, தன்னை நேரடியாக
அழைத்திருக்கக்கூடாது என்றும், அத்தகைய
புகார்கள் பள்ளி மூலமாகவே வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். அதோடு தன் கணவர்
ஒரு போலீஸ் அதிகாரி என்றும் பயம் காட்டுகிறார்.
தொலைபேசி எண்ணை
அடிப்படையாகக் கொண்டு உங்கள் அடையாளத்தைக் கண்டறிய முடியும் என்றும் அந்த நபரை ஆசிரியர்
எச்சரிக்கிறார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பள்ளி மாவட்ட கல்வித்
துறைக்கு தகவல் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு கல்வி அமைச்சும்
இந்த சர்ச்சையைக் கவனத்தில் எடுத்துள்ளது.
Seorang guru di Perak dikecam kerana didakwa mengeluarkan kenyataan berbaur perkauman terhadap pelajar berusia 13 tahun. Rakaman audio menunjukkan guru itu menghina pelajar dan keluarganya. Kementerian Pendidikan telah dimaklumkan, dan pertemuan antara guru dan ibu bapa dijadualkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *