வீட்டுக்காவல் விவகாரம்:விசாரணையை நிறுத்துவதில் நஜிப் ரசாக் தோல்வி!

- Muthu Kumar
- 25 Mar, 2025
புத்ராஜெயா, மார்ச் 25-
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவு குறித்து மேல்முறையீடு செய்ய அரசுத் தரப்பினர் (பிராசிகியூஷன்) முயற்சி மேற்கொண்டனர்.அதனைத் தடுத்து நிறுத்த அவரின் தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர்கள் மேற்கொண்ட பூர்வாங்க ஆட்சேபத்தை கூட்டரசு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
அரசுத் தரப்பின் மேல்முறையீடு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சட்டத்துறைத் தலைவரின் உரிமைகளை அது எந்த வகையிலும் நிராகரிக்கவில்லை என்று கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில் நஜிப் கூறியிருந்தார். இதனால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு குறித்து மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தற்காப்பு அமைச்சு கருதி வந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அம்முடிவை மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹஷிம் தலைமையில் நேற்றுக் கூடிய கூட்டரசு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதி அமர்வு ஏற்றுக் கொள்ளவில்லை.தமது மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சேர்த்துக் கொள்ள நஜிப்பின் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹஸ்னா சொன்னார்.
ஆகவே, நஜிப்பின் பூர்வாங்க ஆட்சேப மனு நிராகரிக்கப்படுகிறது. வீட்டுக் காவல் உத்தரவு மீது விண்ணப்பம் செய்ய அரசுத் தரப்புக்கு அது அனுமதியளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
Mahkamah Persekutuan menolak bantahan awal peguam Najib Razak terhadap rayuan pihak pendakwaan mengenai perintah tahanan rumahnya. Ketua Hakim Malaya, Hasnah Hashim, menegaskan bahawa pasukan pembelaan tidak boleh mengemukakan bukti baharu, membolehkan kerajaan meneruskan rayuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *