வீட்டில் தீ! ஒருவர் பலி; ஐவர் காயம்! மலாக்காவில் நிகழ்ந்த அதிகாலை சோகம்

- Shan Siva
- 21 Mar, 2025
அதிகாலை 3.58 மணிக்கு வந்த பேரிடர் அழைப்பைத் தொடர்ந்து
மலாக்கா தெங்கா மற்றும் படாங் தெமு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த
20 பணியாளர்கள்
அனுப்பப்பட்டதாக மலாக்கா மூத்த தீயணைப்பு அதிகாரி சுஹைமி அதான் தெரிவித்தார்.
ஒருவர் வீட்டை
விட்டு வெளியேறிய நிலையில், மேலும் நான்கு
பேர் மீட்கப்பட்டனர். காயமடைந்த ஐந்து பேரில் 50 முதல் 76 வயதுடைய நான்கு
ஆண்களும், 38 வயதுடைய சீனப்
பெண் ஒருவரும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
இந்த தீ
விபத்தில் மூன்று வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாகின.
தீயணைப்பு நடவடிக்கை காலை 6.27 மணிக்கு முடிவடைந்தது, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.
Sebuah rumah dua tingkat di Lorong Bandar Hilir 3, Melaka, terbakar awal pagi tadi, mengorbankan seorang dan mencederakan lima orang. Api memusnahkan 70% rumah serta tiga kenderaan. Operasi pemadaman tamat pada 6.27 pagi, dan mangsa dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *