பிகேஆர் இளைஞர் பகுதித் தேர்தல்- தலைவர் பதவிக்கு அன்வாரின் அரசியல் செயலாளர் போட்டி!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19-

விரைவில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் பிகேஆரின் இளைஞர் பகுதியின் துணைத் தலைவர் காமில் முனிம் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.இளைஞர் பகுதியை பலப்படுத்தி அடிமட்டத் தொண்டர்களுக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்காக அப்பகுதியின் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடுவதாக காமில் குறிப்பிட்டார்.

பிகேஆர் இளைஞர் பகுதியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போகிறேன். அப்பகுதியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பிகேஆர் கட்சியினுடைய தற்போதைய இளைஞர் பகுதித் தலைவர் அடாம் அட்லி ஆவார். இளைஞர் மற்றும் விளையாட்டுதுத்துறை துணையமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார். வரும் கட்சித் தேர்தலில் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் உறுப்பினர் பதவிக்குத் தாம் போட்டியிடப் போவதகாக இம்மாதம் 8ஆம் தேதியன்று அடாம் அறிவித்திருந்தார்.

நிதியமைச்சருமான அன்வாரின் அரசியல் செயலாளரே காமில் ஆவார்.பிகேஆரின் டிவிஷன் நிலை தேர்தல்கள் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலும் மத்திய தலைமைத்துவ தேர்தல் மே 24ஆம் தேதியன்றும் நடைபெறுகின்றன.

Kamil Munim, Timbalan Ketua Angkatan Muda Keadilan (AMK), mengesahkan pencalonannya untuk jawatan Ketua AMK dalam pemilihan parti PKR yang akan datang. Beliau berhasrat mengukuhkan pergerakan itu dan memberi semangat baharu kepada akar umbi. Pemilihan cabang akan berlangsung dari 11 hingga 20 April, manakala pemilihan Majlis Pimpinan Pusat pada 24 Mei.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *