சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் வெளிநாட்டினரை அனுமதித்த அதிகாரி கைது!

top-news

மார்ச் 28,

கோலாலம்பூர் விமான நிலையத்தில் குடிநுழைவு ஆணையத்தில் பணியாற்றும் ஓர் அரசு அதிகாரி, முறையானச் சோதனையின்றி வெளிநாட்டினர்களை மலேசியாவுக்குள் அனுமதித்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தபட்ட அதிகாரியைக் கைது செய்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

நேற்று நண்பகல் 12 மணியளவில் சந்தேகத்திற்குரிய குடிநுழைவு அதிகாரியைச் சோதனையிட்டதில் 9 பாக்கிஸ்தான் பாஸ்போர்ட்களும் 2 இலங்கை பாஸ்போர்ட்களும் அவரின் சட்டை பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார். சம்மந்தப்பட்ட்ட குடிநுழைவு அதிகாரி பணியிலிருந்த போது ஒரு சில வெளிநாட்டினர்களை மெத்தனமாகச் சோதனையிட்டதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

Seorang pegawai imigresen di KLIA ditahan kerana didakwa membenarkan kemasukan warga asing tanpa pemeriksaan sah. Pemeriksaan menemui sembilan pasport Pakistan dan dua pasport Sri Lanka dalam begnya. Tangkapan dilakukan berdasarkan aduan berhubung kelonggaran pemeriksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *