நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஓப் செலாமாட் நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 24:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஓப் செலாமாட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதில் 6,957 காவல் துறை அதிகாரிகளும் உறுப்பினர்களும் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபடுவோரில் 871 அதிகாரிகளும் 6,086 உறுப்பினர்களும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் ‘ஹாட்ஸ்பாட்‘ எனப்படும் அடிக்கடி விபத்து நிகழும் 25 இடங்களும் ‘பிளாக்ஸ்பாட்‘ எனப்படும் மரண விபத்துகள் நிகழும் 46 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,  வாகன பழுது அல்லது அவசர உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று ‘நடைபெற்ற 24வது ஓப் செலாமாட் தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Bagi memastikan keselamatan jalan raya sempena Aidilfitri, Ops Selamat akan berlangsung dari 29 Mac hingga 3 April dengan penyertaan 6,957 anggota polis. Kawalan ketat akan dilakukan di 25 kawasan kemalangan kerap dan 46 lokasi maut bagi mengurangkan risiko kemalangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *