RM 1 மில்லியன் மதிப்பிலானத் தேங்காய்களைக் கடத்திய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Mar, 2025
மார்ச் 20,
மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குத் தேங்காய்களைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவரைக் கைது செய்துள்ளதாக எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் தெரிவித்தனர். பிற்பகல் 1.30 மணிக்குச் சந்தேகத்திற்குரிய treler லாரியைச் சோதனையிடும் போது முறையான ஆவணங்களின்றி 38,580 தேங்காய்களைத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற 38 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட தேங்காயின் உள்ளூர் மதிப்பு சுமார் 1 மில்லியன் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் சட்டவிரோதமாகத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்றதாகவும் முதற்கட்ட விசாரணையி தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 38 வயது உள்ளூர் லாரி ஓட்டுநருக்குக் கடத்தல் தேங்காய்கள் என தெரியாது என்றும் தேங்காய்களைத் தாய்லாந்து எல்லை பகுதியில் சேர்க்க வேண்டும் என உத்தரவு கிடைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Seorang pemandu lori berusia 38 tahun ditahan ketika cuba menyeludup 38,580 biji kelapa bernilai RM1 juta ke Thailand tanpa dokumen sah. Suspek mendakwa tidak mengetahui kelapa tersebut diseludup dan hanya diarahkan menghantarnya ke sempadan Thailand.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *