தகராறு செய்த லாரி ஓட்டுநர் கைது!

top-news

மார்ச் 22,

பிற வாகனங்களுக்கு வழிவிடாமல் சாலை விதிமுறைகளை மீறி லாரி ஓட்டுநர் ஒருவர் லாரியைச் செலுத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். லாரி ஓட்டுநரின் செயலால் பாதிக்கப்பட்ட வாகனமோட்டிக் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

காஜாங்கில் உள்ள Jalan Persiaran Mahkota குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தததாகவும் இரவு 10 மணிக்குச் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரான 60 வயது முதியவர் அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீதும் சாலையில் பிற வாகனங்களுக்கு அச்ச்சறுத்தலை ஏற்படுத்தும் வாகனமோட்டிகளின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.

Seorang pemandu lori berusia 60 tahun ditahan di rumahnya selepas videonya melanggar peraturan jalan raya tular. Dia ditangkap di Kajang susulan aduan pemandu lain. Polis menegaskan tindakan tegas terhadap pemandu yang membahayakan pengguna jalan raya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *