ஐவர் பலியான விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநர் கைது!

top-news

மார்ச் 28,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் சம்மந்தப்பட்ட விபத்தில் கணவன் மனைவி 2 வயது மகள் என ஐவர் பலியான நிலையில், விபத்துக்கானக் காரணமானது 35 வயது லாரி ஓட்டுநர் என காவல்துறையினர் கண்டறிந்துள்ளதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட லாரியின் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தை விடவும் அதிக வேகமாக லாரி செலுத்தப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குக் காரணமான 35 வயது லாரி ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சைக்குப் பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

Kemalangan membabitkan lima kenderaan di Lebuhraya Utara-Selatan mengorbankan lima nyawa, termasuk pasangan suami isteri dan anak mereka. Pemandu lori berusia 35 tahun dipercayai menjadi punca akibat tayar meletup dan kelajuan berlebihan. Dia kini menerima rawatan sebelum disoal siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *