வாகன விற்பனையில் மோசடி செய்த இல்லத்தரசி கைது!

- Sangeetha K Loganathan
- 21 Mar, 2025
மார்ச் 21,
பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பதாக மோசடியில் ஈடுபட்ட 37 வயது இல்லத்தரசி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மூவர் Sesyen நீதிமன்றத்தில் தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையுடன் ஜாமின் கோரினார். கடந்த டிசம்பர் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை விற்பதாகத் தன்னிடமிருந்து RM7,450 பணத்தைப் பெற்றதாகவும் அதன் பின்னர் மேல்நடவடிக்கைகள் ஏதுமில்லை என பாதிக்கப்பட்டவர் புகார் அளித்திருந்த நிலையில் மூவார் Sesyen நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற மேல் விசாரணையைக் கோரிய 37 வயது இல்லத்தரசி தனது 3 பிள்ளைகளைப் பராமரிப்பதால் ஜாமீன் விண்ணப்பத்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஒரு நபர் நிபந்தனையுடன் RM8,000 ஜாமீன் வழங்கப்பட்டதுடன் மாதம் ஒரு முறை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகும்படியும் ஏப்ரல் 25 நீதிமன்ற விசாரணையைத் தொடர்வதாகவும் மூவார் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Seorang suri rumah berusia 37 tahun dituduh menipu dalam jualan kenderaan terpakai melibatkan RM7,450. Dia mengaku tidak bersalah di Mahkamah Sesyen Muar dan dibebaskan dengan jaminan RM8,000. Perbicaraan diteruskan pada 25 April.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *