MASJID INDIA கோயிலுக்கானத் தீர்வை ஏற்றுக் கொள்வோம்! – அமைச்சர் கோபிந்த் சிங்!

top-news

மார்ச் 27,


தலைநகரில் அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழமையான Dewi Sri Pathrakaliaman கோயில் தொடர்பாகச் சுமூகமாக எடுக்கப்பட்டிருக்கும் தீர்வை முழுமையாக நாம் ஏற்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக்கொண்டார். இது பெரும் பிரச்சனையாகும் முன்னமே அரசாங்கத்தின் பொறுப்பாளர்கள் சுமூகமாகத் தீர்வைக் கண்டதற்கு வழிவகுத்த கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa, கோலாலம்பூர் மேயர் Datuk Seri Maimunah Mohd Sharif ஆலய நிர்வாகத்தினர்களுக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தனிநபர் நலன் அடிப்படையிலும் ஒரு சாரருக்கு ஆதரவாகும் எந்தவொரு முடிவும் எடுக்கபடவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரத்தில் சட்ட நிர்வாகச் சீர்திருத்த துணை அமைச்சர் குலசேகரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கிய காரணம் என்பதாகவும் திரைக்குப் பின்னால் சில முக்கிய நபர்கள் இந்த கோயிலுக்கு ஆதரவாகவும் இந்த பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கபட வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டவர்களுக்கும் தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Menteri Gobind Singh Deo meminta semua pihak menerima penyelesaian isu pemindahan kuil Dewi Sri Pathrakaliaman secara harmoni. Beliau menghargai peranan kerajaan termasuk Menteri Dr Zaliha Mustafa dan pemimpin lain dalam menyelesaikan isu ini tanpa kepentingan peribadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *