RM14,565 மதிப்பிலான LPG எரிவாயுவைப் பதுக்கிய நால்வர் கைது!

top-news

மார்ச் 18,

திரவ நிலையிலான LPG எரிவாயுவைப் பொருள் கிடங்கில் பதுக்கிய நால்வரை உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஷா அலாமில் உள்ள Kampung Jawa சாலையின் வணிக வளாகத்தில் அமைந்துள்ள பொருள் கிடங்கில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் புத்ரா ஜெயா KPDN அதிகாரிகள் இரவு 7 மணிக்குச் சோதனையை மேற்கொண்டதாகவும் சோதனையில் 608 பீப்பாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 608 பீப்பாய்களிலும் திரவ நிலையிலான LPG எரிவாயு சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் லாரியின் மூலமாகச் சம்மந்தப்பட்ட பீப்பாய்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்ததுடன் நால்வரைக் கைது செய்துள்ளதாகச் சிலாங்கூர் மாநில உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத் துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட திரவ நிலையிலான LPG எரிவாயுவின் மதிப்பு RM14,565 என கணக்கிடப்பட்டுள்ளது.

KPDN menumpaskan sindiket penyelewengan LPG dalam serbuan di Shah Alam, menyita 608 tong LPG bernilai RM14,565 serta merampas peralatan dan tiga lori. Empat lelaki, termasuk seorang warga asing, ditahan. Premis haram itu dipercayai beroperasi sejak dua bulan lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *