40 டன் அரிசியைக் கடத்த முயன்ற இருவர் கைது!

top-news

மார்ச் 18,

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக 40 டன் அரிசியைக் கடத்த முயன்ற 2 உள்ளூர் ஆடவர்களை எல்லை பாதுகாப்பு கடத்தல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரி கைது செய்துள்ளதாக வடக்கு PGA உதவி இயக்குநர் Shahrum Hashim தெரிவித்தார். கிளாந்தானில் உள்ள Rantau Panjang வழியாகச் சம்மந்தப்பட்ட அரிசிகளை லாரியில் மலேசியாவுக்குள் கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மாலை 4 மணிக்கு ஜித்ரா சாலையில் லாரியைச் சோதனையிட்ட போது லாரி ஓட்டுநரிடமும் அவரின் உதவியாளரிடமும் அரிசி மூட்டைகளை மலேசியாவுக்குள் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் ஏதுமில்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் 30 வயது 34 வயதுள்ள இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் வடக்கு PGA உதவி இயக்குநர் Shahrum Hashim தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட 40 டன் அரிசி மூட்டைகளின் மதிப்பு RM160,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

Dua lelaki ditahan di Jitra kerana cuba menyeludup 40 tan beras putih dari negara jiran. Beras bernilai RM160,000 dirampas, bersama treler, dengan nilai keseluruhan RM510,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *