பி.கே.ஆர் தேர்தலில் நடிக்க வேண்டாம்! வெளிப்படையாகப் போட்டியிடுங்கள்! - Rafizi Ramli

- Sangeetha K Loganathan
- 20 Mar, 2025
மார்ச் 20,
மே 24 ஆம் திகதி பி.கே.ஆர் கட்சியின் தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தல் நடைபெறவிருக்கு நிலையில் உதவித் தலைவர் மத்திய செயல்குழுப் பதவிகளுக்குக் கடுமையானப் போட்டி இருந்தாலும் கட்சிப் பொறுப்புகளுக்காகப் போட்டியிடுபவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் Rafizi Ramli தெரிவித்தார்.
கட்சியிந் தேர்தல் உங்கள் அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்காது, மக்கள் நலனில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள் நிலைத்து இருப்பார்கள் என்பதை நினைவில் கொண்டு கட்சித் தேர்தலில் நியாயமாகவும் ஜனநாயகத்துடனும் போடியிடும்படி Rafizi Ramli வேட்பாளர்களைக் கேட்டுக்கொண்டார். அரசியல்வாதிகள் மாபெரும் நடிகர்கள் தான். அதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் நடிக்க வேண்டாம் என்றும் வெளிப்படையாகக் கட்சித் தேர்தலில் போட்டியிடுங்கள் என்றும் Rafizi Ramli வலியுறுத்தினார்.
Timbalan Presiden PKR Rafizi Ramli menggesa calon yang bertanding dalam pemilihan parti pada 24 Mei agar bersaing secara terbuka dan adil. Beliau menekankan bahawa pemilihan ini tidak menentukan masa depan politik seseorang tetapi keikhlasan dalam berkhidmat kepada rakyat yang lebih penting.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *