குண்டர் கும்பலைச் சேர்ந்த 7 பேரைக் காவல்துறை தேடுகிறது!

- Sangeetha K Loganathan
- 22 Mar, 2025
மார்ச் 22,
பல்வேறுக் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 7 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் அவர்களின் புகைப்படங்களையும் காவல்துறையினர் வெளியிட்டனர். தானா மேராவில் அவர்கள் மீது பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைக்க பெற்ற நிலையில் அவர்ளைக் காவல்துறை தேடி வருவதாக Tanah Merah மாவட்டக் காவல் ஆணையர் Mohd Haki Hasbullah தெரிவித்தார்.
தேடப்படும் குற்றவாளிகளான அவர்கள் 7 பேரும் 33 ம் உதல் 39 வயதுடைய உள்ளூர் ஆடவர்கள் என்றும் Kampung Felda Kemahang 3, Gual Ipoh பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவல் தெரிந்த பொதுமக்கள் இன்ஸ்பெக்டர் Chek Azri Che 017-6970665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது தானா மேரா மாவட்ட காவல் தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம் என Tanah Merah மாவட்டக் காவல் ஆணையர் Mohd Haki Hasbullah தெரிவித்தார்.
Polis Tanah Merah memburu tujuh lelaki tempatan berusia 33 hingga 39 tahun yang disyaki terlibat dalam jenayah keganasan. Gambar mereka telah didedahkan, dan orang ramai diminta menyalurkan maklumat kepada polis bagi membantu siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *