ஆடவரைத் தாக்கிய மோட்டார் சைக்கிளோட்டியைத் தேடும் காவல்துறை!

- Sangeetha K Loganathan
- 25 Mar, 2025
மார்ச் 25,
சாலையின் நடுவே மோட்டார் சைக்கிளோட்டியைக் கடுமையாகத் தலையில் தாக்கிய ஆடவரைக் காவல்துறையினர் தேடிவருவதாக வடக்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh Mahindar Singh தெரிவித்தார். சமிஞ்சை விளக்கில் நின்றுக் கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளோட்டியைப் பின்னிருந்து வந்த ஆடவர் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதாக Balveer Singh Mahindar Singh தெரிவித்தார்.
காணொலி பரவும் முன்னமே பாதிக்கப்பட்ட 29 வயது இளைஞர் வடக்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Balveer Singh Mahindar Singh தெரிவித்தார். நேற்று மாலை 4.29 மணிக்கு ஜொகூர் தம்போய் சாலையில் உள்ள சமிஞ்சை விளக்கில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த தம்மைப் பின்னிருந்து வந்த அடையாளம் தெரியாத் அடவர் பல முறை தலையில் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட 29 வயது இளைஞர் வடக்கு ஜொகூர் பாரு மாவட்டக் காவல் நிலையத்தில் மாலை 4.40 மணிக்குப் புகார் அளித்துள்ளார். ‘
Polis mencari lelaki yang menyerang seorang penunggang motosikal lelaki di lampu isyarat di Jalan Tampoi, Johor Bahru. Kejadian tular di media sosial. Mangsa, 29, telah membuat laporan polis sejurus selepas insiden berlaku.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *