சாலையில் துப்பாக்கிச் சூடு! கொள்ளையர்கள் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 29 Mar, 2025
மார்ச் 29,
சுபாங் ஜெயா சாலையில் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் கொள்ளையர்கள் என நம்பப்படும் 2 உள்ளூர் ஆடவர்களைக் கைதூ செய்தனர். நேற்று பிற்பகல் 3.50 மணிக்கு Jalan SS14 சாலையில் போலிசாரின் வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் மோதி தப்பிக்க முயன்றதால் சம்மந்தப்பட்ட வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 30 வயதுடயை ஆடவரும் 40 வயது மற்றோர் ஆடவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்ததாகவும் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் Subang Jaya மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
Dua lelaki ditahan selepas cuba melarikan diri dan merempuh kenderaan polis di Subang Jaya. Pihak polis melepaskan tembakan tetapi tiada kecederaan dilaporkan. Kedua-dua suspek dipercayai terlibat dalam pelbagai kes rompakan dan merupakan penjenayah dikehendaki.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *