ஆப்பிள் நிறுவனம் தங்கள் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க முடிவு!

top-news
FREE WEBSITE AD

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், மேக் கணினிகள், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதுமே டிமாண்ட் இருக்கிறது.

இந்த டிமாண்டுக்கு ஏற்ற வகையில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் அப்டேட் என்ற எக்ஸ் பக்கத்தில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் தற்போது 15 நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து ஆப்பிள் நிறுவனத்திற்காக பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன.

இதில் 11 நிறுவனங்கள் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன.ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் 187 நிறுவனங்கள் இவர்களுக்கு தேவையான ஐபோன், மேக் கணினி, ஐவாட்ச் ஆகியவற்றை உற்பத்தி செய்து வழங்குகின்றன. அதில் 14 நிறுவனங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. இந்த 14 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரித்து வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் வியட்நாமும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 12.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களின் மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 100 சதவீதத்திற்கும் மேல் உயர்த்துள்ளன.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் கர்நாடகாவை சேர்ந்த Aequs (ஏக்வேஸ்) குழுமத்திற்கு தங்களுடைய ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. Aequs நிறுவனம் சோதனை அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான மேக் கணினிகள் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை தயாரித்து வழங்க இருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் , ஃபாக்ஸ் கான், ஃபிளெக்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் ஐபோன்களை தயாரித்து வழங்குகின்றன.ஆப்பிள் போன்களின் உற்பத்தி அதிகரிக்கும் அதே வேளையில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனையும் இந்தியாவில் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஃபோன்களை தயாரிக்கும் மையமாக மட்டுமின்றி விற்பனை செய்யும் மையமாகவும் இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *