இடிக்கப்பட்ட சட்டவிரோத வணிகக் கடைகள்!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
தலைநகரில் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 8 வணிகக் கடைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இடித்தது. தலைநகரின் Pasar Borong பகுதியில் அமைந்துள்ள 6 வணிகக் கடைகளையும் 2 பொருள் கிடங்களையும் கடந்த 14 மார்ச் சோதனையிட்டதில் வணிகக் கடைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நிலத்தை மீறி அரசு நிலங்களை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் வணிகக் கடைகளின் சுவர்கள் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வணிகக் கடைகள் அதன் சுற்றியுள்ள அரசு நிலங்களையும் பொது இடங்களையும் நடைப்பாதைகளையும் ஆக்கிரமித்து தடுப்புச் சுவர்களைக் கட்டியிருப்பதாகவும் கோலாவம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளுக்கு முன்னமே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வணிகக் கடையின் உரிமையாளர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் தடுப்புச் சுவர்கள் இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) merobohkan lapan premis perniagaan haram di Pasar Borong kerana menceroboh tanah kerajaan. Premis ini telah beroperasi lebih 15 tahun dan melanggar peraturan walaupun telah diberi amaran terlebih dahulu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *