இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட பண விவகாரம்- 32 பேரிடம் எம்ஏசிசி விசாரணை!

- Muthu Kumar
- 11 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 11-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் புலன்விசாரணையின் ஒரு பகுதியாக 32 பேரிடம் மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் எம்ஏசிசி இதுவரை விசாரணை நடத்தியுள்ளது.அவர்களைத் தவிர்த்து, மேலும் 23பேர் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்படவுள்ளனர் என்று தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்தது.
கள்ளப் பணப்பரிமாற்றம் தொடர்பில் எம்ஏசிசி நடத்திவரும் விசாரணையின் விளைவாக பதினேழு கோடி ரொக்கப் பணமும் தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் ரொக்கப் பணமும் தங்கக் கட்டிகளும் இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டன. எம்ஏசிசி அதிகாரிகளால் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட நான்கு நபர்கள் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளனர் என்று அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
மேலும், பல நிதிக்கழகங்களிடம் இருந்து பல வங்கி ஆவணங்களையும் எம்ஏசிசி கோரியிருக்கிறது. அந்த ஆவணங்களுக்காக அது காத்திருக்கிறது.நாட்டின் ஒன்பதாவது பிரதமரான இஸ்மாயில் சப்ரியிடமிருந்து இரண்டாவது முறையாக இம்மாதம் 5ஆம் தேதி இரண்டாவது முறையாக வாக்குமூலம் பதிவுசெய்யப்பட இருந்தது. ஆனால், அவர் திடீரென்று உடல்நலக்குறைவுக்கு ஆளானதால் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை.இதனிடையே, பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரிக்கு இம்மாதம் 12ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
SPRM telah menyoal siasat 32 individu dalam siasatan terhadap bekas PM Ismail Sabri Yaakob, dengan 23 lagi akan dipanggil. Sejumlah RM17 juta dan jongkong emas dirampas. Ismail Sabri, yang sepatutnya memberi keterangan, mendapat cuti sakit sehingga 12 Mac.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *