10 லட்சம் மதிப்பிலானப் பட்டாசுகள் பறிமுதல்! முதியவர் கைது!

top-news

மார்ச் 25,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்ட 10லட்சம் ரிங்கிட் மதிப்பிலானப் பல்வேறு வகை பட்டாசுகளைச் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்ததாகப் பினாங்கு மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Rohaizad Ali தெரிவித்தார். Perai பகுதியில் உள்ள பொருள் கிடங்கில் சட்டவிரோதப் பொருள்களைப் பதுக்கி வைப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பொருள் கிடங்கிலிருந்த 7 கொள்கலன்களைச் சோதனையிட்டதாகப் பினாங்கு மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Rohaizad Ali தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட 7 கொள்கலன்களிருந்து 28 கிலோ கிராம் எடையிலான வானவேடிக்கை பட்டாசுகளும் குழந்தைகள் விளையாடும் மத்தாப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பினாங்கு மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Rohaizad Ali தெரிவித்தார். சோதனையின் போது சம்மந்தப்பட்ட கிடங்கிலிருந்து முதியவர் ஒருவர் தப்பிக்க முயன்றதாகவும் 60 வயது முதியவரைக் காவல்துறையினர் கைது செய்ததாகவும் பினாங்கு மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Rohaizad Ali தெரிவித்தார்.

Pihak kastam Pulau Pinang merampas mercun bernilai RM1 juta yang diseludup secara haram ke Malaysia. Sebanyak tujuh kontena berisi mercun dan bunga api ditemui di sebuah gudang di Perai. Seorang lelaki warga emas berusia 60 tahun ditahan ketika cuba melarikan diri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *