RM 673,585 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 22 Mar, 2025
மார்ச் 22,
கிளாந்தானில் ஆளில்லாத வாகனத்திலிருந்து பல்வேறு வகையிலான 822,400 சிகரெட்டுகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததாகக் கிளாந்தான் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் WAN JAMAL ABDUL SALAM தெரிவித்தார். நண்பகல் 1.30 மணியளவில் BUKIT MARAK சாலையில் சந்தேகத்திற்குரிய TOYOTA HILUX ரக வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் வாகனத்திலிருந்து சிகரெட் பக்கெட்டுகளைப் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு RM 673,585 என கணக்கிடப்பட்டுள்ளதாகக் கிளாந்தான் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் WAN JAMAL ABDUL SALAM தெரிவித்தார். கடத்தல் சிகரெட்டுகளுடன் RM 85,000 மதிப்பிலான வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jabatan Kastam Kelantan merampas 822,400 batang rokok seludup bernilai RM673,585 dari sebuah Toyota Hilux di Bukit Marak selepas menerima maklumat awam. Kenderaan bernilai RM85,000 turut disita. Pemilik kenderaan masih diburu untuk membantu siasatan lanjut oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *