கிராண்ட் பிரிக்ஸ் உலக வெற்றியாளர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பனுக்கு பொதுநலப் பணி செய்ய உத்தரவு!
- Muthu Kumar
- 23 Sep, 2024
சிங்கப்பூர், செப். 23-
சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிக்கு முன்னதாக, நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில், உலக வெற்றியாளர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பன் தகாத கருத்துக்களைத் தெரிவித்ததால், பொதுநலப் பணிகளில் ஈடுபட அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ட்டுள்ளது.
எஃப்ஐஏயின் கொள்கைகளுக்கு எதிராக, புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்திய குரல் பதிவை மறுமுறை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, ஃபார்முலா ஒனின் முதன்மை அமைப்பான எஃப்ஐஏ மூலம் அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் செய்ய வேண்டிய பொதுநலப் பணிகள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை.மேலும், அச்செயலுக்காக ரேட் புல் அணியின் ஓட்டுநர் வெர்ஸ்டாப்பன் மன்னிப்பு கோரியுள்ளார்.26 வயதுடைய வெர்ஸ்டாப்பன், இரண்டாம் பருவத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறார்.
இப்பருவத்தின் ஒன்பது போட்டியில் வெற்றியைப் பதிவு செய்திருந்தாலும், கடந்த ஜூன் 23ஆம் தேதி ஸ்பெய்னில் நடைபெற்ற போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.இதனிடையே கடந்த பருவத்தில் நடைபெற்ற 22 போட்டிகளில் 19 முறை அபார வெற்றியைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *