தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அனுமதி கொடுத்தவர்களே அபகரிக்கக் காரணமாவதா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 23-

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு என்று தெரியாமல் ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதும் அதற்கு வாட்சாப் புலனத்தில் பதிலுரைகள் வந்து கொண்டிருப்பதும் ஒரு தொடர்கதையாக இருக்கின்றன.

2006ஆம் ஆண்டில் உடைபடுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட இந்த ஆலயத்தை, அப்போதே ஏன் ஆலயத்திற்கான நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளவில்லை என்பதுதான் நம் கேள்வி என்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

ஆனாலும் அப்போது காப்பாற்றப்பட்ட ஆலயத்திற்கு ஏன் அப்போதே நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை. இது யார் தவறு என்கிற கேள்விதான் எழுகிறது. இவையெல்லாம் தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் நடந்தவைகள் என்பது அனைவரும் அறிவர். அப்போதே அன்றைய பிரதமரிடத்தில் பேசி வாங்கியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. இப்போது பிரச்சினை முற்றிய பிறகு வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் பிறப்புப்பத்திரம் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அடையாள அட்டை எடுப்பது சாத்தியமாகும். அடையாள அட்டை எடுக்கும் நேரத்தில் பிறப்புப் பத்திரம் இல்லை என்றால் அதற்கான சிரமத்தை எதிர்நாக்க நேரிடும். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு இப்பொழுது ஒருவர் மீது ஒருவர் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆரம்பத்தில் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவுக் கடிதம் கொடுத்துள்ளது. ஆனால் ஆலய நிர்வாகத்திற்கு எந்தவோர் அறிவிப்பும் கொடுக்காமல், ஆலய நிலத்தை
விற்பனை செய்வதற்கு ஜேக்கேல் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்?

அப்படி நிலத்தை விற்பதாக இருந்தால்
ஏன் ஆலய நிர்வாகத்திடம் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் ஆலய நிர்வாகமே அந்த நிலத்தை வாங்கியிருக்கும். இப்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் ஆலயம் அமைவதற்கு போதுமான நிலமாக இருக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.2,000 சதுரமீட்டர் அளவிலும் 4,000 சதுர மீட்டர் அளவிலும் நிலம் அமையுமானால் அங்கேயும்
பிரச்சினை ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு.

குறைந்தது 5,000 சதுர மீட்டர் அளவாவது அல்லது அதற்கும் கூடுதலாக ஆலயம் அமைவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் ஆலயம் அமைவதற்கு ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாது, இப்போது இருக்கிற ஆலயத்தின் அருகாமையிலேயே ஆலயம் நிலம் கொடுக்கப்பட வேண்டும்.எனவே ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயப்பிரச்சினையில் யாரும் கதாநாயகர்களாக ஆக வேண்டிய அவசியமில்லை.

இதில் இன்னோர் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், ஆலயம் இடம் மாறுவதற்கு ஆலய நிர்வாகம் ஒப்புக் கொண்டு விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பொய்யான தகவலை கொடுத்தது பிரதமர் துறையில் வேலை பார்க்கும் சண்முகம் மூக்கன்தான். அதனால்தான் நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ அன்வார் பேசியதைக் கேட்டு, அமைச்சர் கோபிந்த் சிங் ஆலய நிர்வாகத்திடம் உண்மை நிலவரத்தை கேட்டுத் தெரிந்துள்ளார்.

அதோடு, ஆலயம் இடம் மாற ஒப்புக் கொண்டுவிட்டதாக, கடிதம் எழுதித் தருமாறு ஆலய நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்ட சண்முகம் மூக்கனை அந்த ஆலய நிர்வாகம் விரட்டியடித்த கதை பலருக்கு தெரியாது. இப்படியெல்லாம் பல உண்மைகள் மறைந்திருக்கிறது.எனவே, நம்முடைய உரிமைகளைத் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனமாகும். இவ்வாறு ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

Kontroversi kuil Devi Sri Bhadra Kaliamman di Masjid India, Kuala Lumpur berterusan. Ketua OMS, P. Thiagarajan mempersoalkan mengapa hak milik tanah tidak diperoleh sejak 2006. Beliau juga mendakwa terdapat maklumat palsu kepada Perdana Menteri mengenai persetujuan pemindahan kuil.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *