சரவாக் தேர்தலில் பங்கேற்பதிலிருந்து தீபகற்ப கட்சிகளைத் தடுப்பீர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 17-

சரவாக் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்பதிலிருந்து தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தடுக்கப்பட வேண்டும்.அதற்காக, மாநில அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு, காபுங்ஙான் பார்டி சரவாக் அரசாங்கத்தை சரவாக் மாநில கட்சி ஒன்று வலியுறுத்தி இருக்கிறது.

மாநிலத் தேர்தல்கள் ஒரு மாநில விவகாரமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் தீபகற்ப மலேசியாவைத் தளமாகக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலையிடக் கூடாது" என்று பார்டி பூமி கென்யாலாங் என்ற கட்சி கூறியுள்ளது."சரவாக் மாநில அரசியல் விவகாரங்களில் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பங்கேற்க முடியும் என்று 1963 மலேசிய உடன்பாட்டில் (எம்ஏ63) எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை சரவாக் மக்களுக்கு நினைவூட்ட" அந்த தடை குறித்த ஒரு தீர்மானம், மாநில சட்டசபையின் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவும் வேண்டும் என்று, அக்கட்சித் தலைவர் வூன் லீ ஷான் வலியுறுத்தினார்.

சரவாக்கில் கால் பதித்த முதலாவது மேற்கு மலேசிய அதாவது தீபகற்ப மலேசிய அரசியல் கட்சிகளில் ஜசெகவும் ஒன்றாகும் என்று கூறிய வூன், சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியின் (எஸ்யுபிபி) சில முன்னாள் உறுப்பினர்களால் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் சரவாக்குள் ஜசெக கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார்.

அது முதல், தேர்தல்களில் போட்டியிடுவதற்காக, பிகேஆர் மற்றும் பாஸ் உட்பட மேலும் சில தீபகற்ப மலேசியாவைத் தளமாகக் கொண்டுள்ள கட்சிகள் சரவாக்கினுள் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.சரவாக்கில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்

சரவாக்கிற்கே சொந்தமானவை என்றும் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளினால் “எடுத்துச் செல்ல" முடியாது அல்லது அவை போட்டியிடுவதற்கானவை அல்ல என்றும் ஜசெக ஒப்புக் கொண்டிருந்ததாக, பத்து லிந்தாங் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் ஜசெக உறுப்பினருமான வூன் தெரிவித்தார்.

"ஜசெக அல்லது பிகேஆர் போன்ற ஒரு கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால், மலாயாவைச் சேர்ந்த ஓர் அரசியல் கட்சிக்காக அத்தொகுதி சரவாக்கிலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது."இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. சரவாக் மாநிலத்தின் தொகுதிகள் "எடுத்துச் செல்லப்படுவதால்", மக்களவையில் மாநிலத்தின் பேரம் பேசும் சக்தி குறைந்து விட்டது. மக்களவையை மலாயா கட்டுப்படுத்துவதால், சரவாக்கின் குரல் அரிதாகவே கேட்கப்பப்டுகிறது” என்றும் வூன் தெரிவித்தார்.

Parti Bumi Kenyalang menggesa kerajaan Sarawak meminda perlembagaan negeri bagi menghalang parti politik Semenanjung bertanding dalam pilihan raya Sarawak. Parti itu menegaskan MA63 tidak membenarkan campur tangan politik luar dan menyatakan penyertaan parti Semenanjung melemahkan kuasa rundingan Sarawak di Parlimen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *