ரி.ம 12.95 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, மார்ச் 19-

ஜொகூர் மாநில போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மொத்தம் மூன்று போதைப்பொருள் ஆய்வகங்கள் மற்றும் ஒரு தொழிற்சாலையை முறியடிக்க முடிந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்கி, மார்ச் 11 ஆம் தேதி இரவு 10 மணி வரை, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போதைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் ஜொகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், ஐந்து இடங்களில் சோதனை நடத்தி, அத்துமீறி இயங்கி வந்த ஆய்வகங்களை வெளிக்கொணர்ந்துள்ளனர் என ஜொகூர் காவல்துறை தலைவர் டத்தோ எம் குமார் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

இந்த சோதனையில், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட உள்ளூர் நபர்கள் ஐந்து பேரும், தைவானைச் சேர்ந்த இருவர் என மொத்தம் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல்வேறு போதைப்பொருள்கள், தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் முதன்மை மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுநீர் பரிசோதனையில் அவர்களின் உடலில் எந்தவித போதைப்பொருளும் இல்லை என தெரியவந்துள்ள நிலையில், அவர்களில் மூவருக்கு முன்பு பல குற்றச்சாட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கும்பல் பாதுகாப்பு கண்காணிப்பு கொண்ட அடைவு கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து. அவற்றை போதைப்பொருள் ஆய்வகங்களாக பயன்படுத்தி வந்ததாக டத்தோ எம்.குமார் தெரிவித்தார். இந்தக் குழு கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து செயல்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சோதனையில் 42,500 கிராம் மெத்திலீனியோக்ஸி மெத்தாம்பெத்தமின் பொடி, 182,800 கிராம் சியாபு என மொத்தம் 12.95 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள்கள் சுமார் 1.05 மில்லியன் போதைப்பிரியர்களால் பயன்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்றார்.

மேலும், போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படும் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதன்மை மூலப் பொருட்கள். 1.12 மில்லியன் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுதவிர, மூன்று வாகனங்கள் (ரி.ம 319,000). ஒரு லோரி (ரி.ம 49,800), தங்க நகைகள் (ரி.ம 15.822). மூன்று வங்கிக் கணக்குகள் (ரி.ம 17.600.37) 2 . 4.02 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 14.47 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள். போதைப்பொருள்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, கைது செய்யப்பட்ட ஏழு பேரும் மார்ச் 20 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மோசடி மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 39 பிரிவின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அதனுடன், 1952 ஆம் ஆண்டு நஞ்சு சட்டத்தின் 30(3) பிரிவின் கீழ், அவர்களுக்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது வெ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஜொகூர் மாநில போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை. 2025 ஜனவரி 1 முதல் மார்ச் 17 வரை 5,659 பேரை போதைப்பொருள் தொடர்பாக கைது செய்துள்ளது. இதேகாலப்பகுதியில் 639.38 கிலோ கிராம் மற்றும் 2,872.01 லிட்டர் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மொத்த மதிப்பு 57.01 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 4.77 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றச்செயல்களை ஒழிக்க பொது மக்கள் உதவ வேண்டும் என போலீசார் வலியுறுத்தி, சந்தேகத்திற்கிடமான தகவல்களை 012-2087222 என்ற தொலைபேசி எணின் மூலம் போலீசாருக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.

Polis Johor berjaya membongkar tiga makmal dadah dan sebuah kilang dalam operasi besar, menangkap tujuh suspek serta merampas dadah bernilai RM14.47 juta. Suspek disiasat di bawah Akta Dadah Berbahaya, dan orang ramai diminta melaporkan aktiviti mencurigakan kepada pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *