பூச்சோங்கில் 13.5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்! இந்திய ஆடவர் கைது!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கோபி)

கோலாலம்பூர், ஜூன் 20-
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும், கிளந்தான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் இணைந்து நடத்திய சோதனையில் 13.5 லட்சம் மதிப்புள்ள ஷாபு, கெதமின் உள்ளடங்கிய மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

ஜூன் 17, 2024 அன்று, நண்பகல் 12.50 மணியளவில், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு பூச்சோங்கில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்ததில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 36 வயதுடைய உள்ளூர் இந்திய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில், இந்தச் சந்தேக நபரிடம் எந்த குற்றப் பதிவும் இல்லை. காவல்துறையின் முதற்கட்ட ஸ்கிரீனிங் சோதனையில் சந்தேக நபரின் சிறுநீர் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக உள்ளதாக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ காவ் கொக் சின் கூறினார்.

இந்தச் சோதனை நடவடிக்கையில் 13.5 லட்சம் மதிப்பிலான மருந்துப் பொருட்களைக் கைப்பற்றியதோடு, மருந்து சேமிப்புக் கடையையும் முற்றிகையிட்டதாக அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில்  73.150 கிலோ கெத்தமினை 71 'டை குவான் யின்' எழுத்து கொண்ட பொட்டலங்களிலும், 308,691 கிலோ ஷாபுவை 300 'குவான்யின்வாங்' எழுத்து கொண்ட பொட்டலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை 1.8 மில்லியன் போதைக்கு அடிமையானவர்களால் பயன்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போதை பொருள் விற்பனை நடவடிக்கை இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து செய்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அடுக்கு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து, அதனைப் போதை மருந்துகளை சேமிக்கும் இடமாக  மாற்றியுள்ளனர். ஒரு முறை பரிமாற்றப்படும் போதை பொருளுக்கு 6,000 வெள்ளி வரை பணம் கிடைப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ காவ் கொக் சின் சொன்னார்.

இந்த வழக்கு பிரிவு 39B ADB 1952 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் சந்தேக நபர் விசாரணைக்காக ஜூன் 18, 2024 முதல் ஜூன் 24, 2024 வரை (7) நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்றும் அவர் சொன்னார்.

அதோடு, 1988ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகளின் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ் 37,000.00 வெள்ளி மதிப்பிலான ஹூண்டாய் சொனாட்டா வாகனமும்  500 வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இத்தகைய போதைப் பொருள் நடவடிக்கை நடப்பதை பொது மக்கள் அறிந்திருந்தால் 012-208 7222 என்ற போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் ஹாட்லைன் மூலம் தகவலைத் தெரிவிக்கலாம் என்று டத்தோ காவ் கொக் சின் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *